இந்தியா

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,296 பேருக்குத் தொற்று: 10 பேர் பலி

UNI

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,296 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,296 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,77,070 ஆக உள்ளது. 

கடந்த இரு நாள்களில் 2,062 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1.46 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஒருநாளில் மட்டும் 55,892 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 81.23 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,062 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT