இந்தியா

போதைப்பொருள் தொடர்பான விவகாரத்தில் நான்கு பிரபல நடிகைகளுக்கு சம்மன்

23rd Sep 2020 05:59 PM

ADVERTISEMENT

 

மும்பை: போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் நான்கு பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான தனி வழக்கில் பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் சவ்கிக் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

அந்த விசாரணையின் தொடர்ச்சியாக பிரபல பாலிவுட் நடிகைகளுக்கும் போதை விவகாரத்தில் தொடர்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் நான்கு பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  

பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.

அவர்கள் விரைவில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT