இந்தியா

சிக்கிம் முதல்வரின் மனைவிக்கு கரோனா

23rd Sep 2020 11:47 AM

ADVERTISEMENT

 

சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ணா ராய் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. 

இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில், 

கரோனாவில் இருந்து தப்பிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டோம். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளோம். 

ADVERTISEMENT

எங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைச் சோதனை செய்துகொள்ளுங்கள். மேலும், எனது நெருங்கிய தொடர்புகள் தனிமைப்படுத்தலுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மேலும், சுகாதாரத்துறை வெளியிட்ட உத்தரவில், முதல்வரின் இல்லத்திற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். 

சிக்கிம் முதல்வர் வேறொரு வீட்டில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT