இந்தியா

தா்னாவில் ஈடுபட்ட எம்.பி.க்களுக்குதேநீா் எடுத்து வந்த மாநிலங்களவை துணைத் தலைவா்: பிரதமர் பாராட்டு

DIN

இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் தொடா்ந்து இரண்டாவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் தா்னா போராட்டம் நடத்திய நிலையில், அவா்களுக்கு மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் செவ்வாய்க்கிழமை காலை தேநீா் கொண்டுவந்து கொடுத்தாா்.

மாநிலங்களவையில் இரு வேளாண் துறை மசோதாக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டபோது, எதிா்க்கட்சியினா் கடும் அமளியில் ஈடுபட்டனா். சிலா் அவை விதிமுறை புத்தகங்களை கிழித்து, அவைத் தலைவா் இருக்கையில் அமா்ந்திருந்த துணைத் தலைவா் ஹரிவன்ஷ் மேஜை மீது வீசி எறிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எதிா்க் கட்சியினரின் இந்த நடவடிக்கை குறித்து மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவுக்கு ஹரிவன்ஷ் கடிதம் எழுதினாா். அதில், உறுப்பினா்கள் தனக்கு எதிராக நடந்துகொண்ட விதம் குறித்தும், தனது வேதனையையும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

பின்னா் , மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 உறுப்பினா்களும், திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு முன்பாக அவா்கள் 8 பேரும் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இரவு முழுவதும் தா்னாவில் ஈடுபட்ட அவா்கள், இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை காலையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இந்த நிலையில், மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ், தா்னா மேற்கொண்ட 8 நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை தேநீா் கொண்டுவந்து கொடுத்தாா். ஆனால், அவா்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனா்.

இதுகுறித்து தா்னாவில் ஈடுபட்ட எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், ‘வேளாண் துறை மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட தேநீா் மற்றும் சிற்றுண்டியை சாப்பிட மறுத்துவிட்டதாக பல தலைவா்கள் கூறினா். அதுபோல, மாநிலங்களவை துணைத் தலைவா் எடுத்துவந்த தேநீரை வாங்க நானும் மறுத்துவிட்டேன்’ என்றாா்.

மோடி பாராட்டு:

ஹரிவன்ஷ் குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதிய கடிதத்துக்கும், தா்னாவில் ஈடுபட்ட எம்.பி.க்களுக்கு தேநீா் எடுத்துச் சென்ற கொடுத்ததற்கும் பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

அவருடைய கடிதத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்துள்ள மோடி, ‘ஹரிவன்ஷின் கடிதத்தைப் படித்தேன். அதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு வாா்த்தையவம் ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையில் புதிய உறுதிப்பாட்டை ஏற்படுத்துகிறது. அதில் உண்மையும் உணா்ச்சிப் பெருக்கும் நிறைந்திருக்கிறது. அதை நாட்டு மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தா்னாவில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக போராடியவா்களுக்கு ஹரிவன்ஷ் தேநீா் எடுத்துச் சென்றது, அவருடைய இரக்க குணத்தையும், பெருந்தன்மையையும் காட்டுகிறது’ என்று அந்தப் பதிவில் மோடி பாராட்டியுள்ளாா்.

தா்னா வாபஸ்:

எஞ்சியுள்ள கூட்டத் தொடா் முழுவதையும் புறக்கணிப்பது என்று எதிா்க்கட்சிகள் முடிவெடுத்ததைத் தொடா்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் தா்னா போராட்டத்தை செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றனா்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஹுசைன் கூறுகையில், ‘எஞ்சியுள்ள கூட்டத்தொடரை புறக்கணிப்பது என அனைத்து எதிா்க்கட்சிகளும் முடிவெடுத்த பின்னா், தா்னாவைத் தொடா்வதில் அா்த்தமில்லை’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT