இந்தியா

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக போஸ்டர் யுத்தம் 

23rd Sep 2020 11:51 AM

ADVERTISEMENT


பாட்னா : பிகாரில் கரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் தேர்தல் ஜுரமும் தொற்றிக் கொண்டுள்ளது.  அங்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது.

பாட்னாவின் பல முக்கிய இடங்களில் மிகப்பெரிய போஸ்டர்களும் பேனர்களும் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. அதில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியும் கைக்குப்பி நிற்பது போன்ற புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

அந்த போஸ்டர்களில், முதல்வர் நிதிஷ் குமார் உதட்டளவில்தான் பிகார் மாநிலத்துக்கு சேவையாற்றுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் வீர் சந்த் பட்டீல் மார்க் சாலையில் இதுபோன்ற ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதேவேளை, கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் புகைப்படத்துடன் கட்சியின் சின்னம் அடங்கிய போஸ்டர்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் அதில் லாலு யாதவ் அல்லது முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை.

ADVERTISEMENT

இன்னும் ஒரு சில மாதங்களில் பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அதற்குள் போஸ்டர் யுத்தகம் தொடங்கிவிட்டது.
 

Tags : bihar assembly election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT