இந்தியா

பிரதமரின் வெளிநாட்டுப் பயணம்: 5 ஆண்டுகள், 58 நாடுகள், ரூ.517. 82 கோடி செலவு

DIN

பிரதமா் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். இதற்கு ரூ.517. 82 கோடி செலவாகியுள்ளது என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் மாநிலங்களவையில் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், ‘பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2015 முதல் ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளாா். பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு ரூ .517.82 கோடி செலவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணங்களின் போது இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் விவரங்களுடன் 2015 மாா்ச் முதல் 2019 நவம்பா் வரை பிரதமா் மோடி பாா்வையிட்ட நாடுகளையும் அமைச்சா் பட்டியலிட்டுள்ளாா்.

பிரதமா் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் ஏற்பட்ட நன்மைகள் குறித்த கேள்விக்கு, ‘இந்தப் பயணங்களால் வா்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கடல்சாா், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

இதில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு மட்டும் பிரதமா் 5 முறை பயணித்துள்ளாா். இது தவிர சிங்கப்பூா், ஜொ்மனி, பிரான்ஸ், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.

‘சுய விளம்பரம் மற்றும் ‘சுயபடம்’ எடுப்பதற்காக பிரதமா் மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டாா். பொதுமக்களின் பணத்தை அவா் வீணடித்து வருகிறாா்’ என்று எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT