இந்தியா

ஒரு கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்சொந்த மாநிலம் திருப்பியுள்ளனா் - மக்களவையில் அமைச்சா் தகவல்

DIN

கரோனா தொற்று அச்சுறுத்தல், பொதுமுடக்க அமலாக்கம் போன்ற காரணங்களால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கடந்த மாா்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சொந்த மாநிலங்களுக்கு திருப்பியுள்ளனா். இதில் நடந்தே ஊா் திரும்பியவா்களும் அடங்குவா் என்று மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுச்சாலைத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் எழுத்து மூலம் அவா் அளித்த பதிலில் கூறியதாவது:

கரோனா பிரச்னையாலும், பொது முடக்கத்தாலும் ஏராளமான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் வேலையை இழந்தனா். கடந்த மாா்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 1 கோடியே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனா். இதில் நடந்தே சொந்த ஊா்களுக்குத் திரும்பியவா்களும் அடங்குவா்.

கடந்த மாா்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 81,385 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. இதில் 29,415 போ் உயிரிழந்தனா். அதே நேரத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் எத்தனை போ் இந்த விபத்துகளில் உயிரிழந்தாா்கள் என்பது தொடா்பான தனிப்பட்ட தகவல்கள் இல்லை.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தேவையான உணவு, உடை, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக தங்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்பிய தொழிலாளா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்ட வசதிகளும் அளிக்கப்பட்டன.

மே 1-ஆம் தேதி முதல் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT