இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

பயங்கரவாதிகள் மறைந்திருப்பது தொடா்பான தகவல் கிடைத்ததை அடுத்து பட்காம் மாவட்டத்தின் நவாடா பகுதியில் திங்கள்கிழமை மாலை முதல் பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது, பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவா் யாா் என்பது தொடா்பாக மாநில போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அந்தப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. முன்னதாக, திங்கள்கிழமை இதேபகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிஆா்பிஎஃப் வீரா் ஒருவா் காயமடைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT