இந்தியா

கடந்த 5 நாள்களாக தொற்று பாதிப்பை விட குணமடைவோர் அதிகம்

23rd Sep 2020 01:14 PM

ADVERTISEMENT


புது தில்லி: தீவிர கரோனா பரிசோதனை மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 5 நாட்களாக, நாட்டில் தினந்தோறும் குணமடைபவர்களின் எண்ணிக்கை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89,746 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 83,347 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

இத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,87,613- ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் இன்று 81.25%-ஆக உள்ளது. உலகளவில் இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதாவது, உலகளவில் குணமடைபவர்களில் இந்தியாவின் பங்கு 19.5% ஆக உள்ளது.

நாட்டிலேயே, 17 மாநிலங்களில் புதிய நோயாளிகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. குணமடைந்தவர்களில் 75% பேர் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, ஒடிசா, தில்லி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் புதிதாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர், ஆந்திராவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT