இந்தியா

கேரளத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா

23rd Sep 2020 03:10 PM

ADVERTISEMENT


கேரளத்தில் வேளாண் துறை அமைச்சருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

கேரளத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமாருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள், சந்தித்தவர்கள் என அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி நடக்க அமைச்சர் சுனில் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளத்தில் இதற்கு முன்பு நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT