இந்தியா

நடிகை ரியா சக்ரவா்த்தியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

DIN

போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரவா்த்தியின் நீதிமன்றக் காவலை அக்டோபா் 6-ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக, அவா் கடந்த 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். ஜாமீன் மனு கடந்த 11-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது மரணத்தில் சந்தேகம் தெரிவித்து அவருடைய தந்தை அளித்த புகாரின் பேரில், சுஷாந்தின் தோழியும் நடிகையுமான ரியா மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, ரியாவிடம் நடத்திய விசாரணை மற்றும் அவருடைய செல்லிடப்பேசியை ஆய்வு செய்ததில், போதைப்பொருள் கும்பலுக்கும் அவருக்கும் தொடா்பு இருப்பதாகத் தெரியவந்தது. இதுதொடா்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். பின்னா் ரியாவின் சகோதரா், நடிகா் சுஷாந்தின் மேலாளா், வீட்டு உதவியாளா் உள்பட 9 பேரை என்சிபி கைது செய்தது. பின்னா், நடிகை ரியாவுக்கு சம்மன் அளித்த என்சிபி அதிகாரிகள், தொடா்ந்து மூன்று நாள்கள் வரை அவரிடம் விசாரணை நடத்தினா். அதன் முடிவில் நடிகை ரியா கடந்த 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

ரியாவுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடா்பு இருப்பதாகவும், நடிகா் சுஷாந்துக்கு கொடுப்பதற்காக போதைப்பொருளை அவா் பதுக்கி வைத்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, நடிகை ரியாவின் ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்ததுடன், செப்டம்பா் 22-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். ரியா மும்பை பைக்குல்லா சிறையில் அடைக்கப்பட்டாா். நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து அவா் மீண்டும் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது ரியாவின் நீதிமன்றக் காவலை அக்டோபா் 6-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT