இந்தியா

மனைவியின் ஆசைக்காக நிலத்தை விற்று யானை வாங்கிய கணவன்

23rd Sep 2020 05:21 PM

ADVERTISEMENT

 

டாக்கா: மனைவியின் ஆசைக்காக நிலத்தை விற்று கணவன் யானை வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர ராய். விவசாயி. இவரது மனைவி துளசி ராணி தசி. துளசிக்கு அவ்வப்போது கனவில் மிருகங்கள் ஏதாவது வருவதுண்டு.அவ்வாறு கனவினில் தோன்றும் மிருகங்களை உடனேயே வாங்கிக் கொடுத்து விடுவது கணவர் சந்திர ராயின் வழக்கம். இதற்கு முன்பாக முந்தைய வருடங்களில் குதிரை, அன்னம் மற்றும் ஆடு போன்றவற்றை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் துளசி ஆசைப்பட்டார் என்று சந்திர ராய் தற்போது யானை ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். மனைவி தனக்கு வந்த யானைக் கனவை பற்றிக் கூறியவுடனேயே, சந்திர ராய் தன்னிடமிருந்த இரண்டு பிகா அளவுள்ள நிலத்தை விற்று பணத்தினைத் திரட்டிக் கொண்டு, மிருகங்கள் விற்பனை செய்யப்படும் மவுல்வி பசார் என்னும்  இடத்திற்குச் சென்று மிகுந்த விலை கொடுத்து யானை ஒன்றை வாங்கியுள்ளார்

ADVERTISEMENT

.அத்துடன் இப்ராஹிம் மியா என்னும் யானைப் பாகனையும் சம்பளம் கொடுத்து யானைப் பராமரிப்புக்கு அழைத்து வந்துள்ளார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ஊர் மக்கள் வியப்புடன் வந்து யானையை பார்த்து சென்று வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT