இந்தியா

ஜம்மு-காஷ்மீரின் அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் ஹிந்தி: மசோதா நிறைவேற்றம்

23rd Sep 2020 04:27 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் காஷ்மீரி, டோக்ரி மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளை சேர்க்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

ஜம்மு-காஷ்மீரில் உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையில் ஜம்மு-காஷ்மீரின் அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் ஹிந்தி, டோக்ரி மற்றும் காஷ்மீரி உள்ளிட்ட மொழிகளைச் சேர்ப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவலின்படி காஷ்மீரில் 74 சதவிகிதமான மக்கள் காஷ்மீரி மற்றும் டோக்ரி மொழியைப் பேசுகின்றனர். இந்தியை 2.3 சதவிகிதம் பேரும், உருது மொழியை 0.16 சதவிகிதம் பேரும் பேசுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : jammu kashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT