இந்தியா

கதிர் ஆனந்த் புகார்: விசாரணையைத் தொடங்கியது தில்லி காவல்துறை

23rd Sep 2020 09:54 AM

ADVERTISEMENT

அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை மிரட்டியதாக கூறிய கதிர் ஆனந்தின் புகாரின் அடிப்படையில் தில்லி காவல்துறையினர் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தபோது, உளவுத்துறை என்று கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அனுமதியின்றி உள்ளே வந்து தன்னை அச்சுறுத்தியதாக மக்களவை கூட்டத்தொடரின்போது அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம்,  நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் புகார் தெரிவித்திருந்தார். மேலும், தில்லி காவல்துறையிடமும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. 

அதன்படி, தில்லி காவல்துறை இதுகுறித்து விசாரிக்கும் என அவைத் தலைவர் ஓம் பிர்லா பதில் அளித்திருந்தார். இதையடுத்து கதிர் ஆனந்தின் புகாரின் அடிப்படையிலும், அவைத் தலைவரின் உத்தரவின்பேரிலும் தில்லி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் வருகைப்பதிவு விவரங்களை அளிக்குமாறு கதிர் ஆனந்திடம் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும், அவர் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் விசாரணை நடத்த காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் அனுமதி இன்றி நேரடியாக தமிழ்நாடு இல்லத்திற்குள் உள்ள கதிர் ஆனந்த் சென்றது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர். 

ADVERTISEMENT

Tags : கதிர் ஆனந்த்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT