இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு குறைகிறதா? குறைக்கப்படுகிறதா?

23rd Sep 2020 10:26 AM

ADVERTISEMENT


புது தில்லி: நாட்டில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது முதலே ஒவ்வொரு நாளும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதல் முறையாக கடந்த 7 நாள்களில் கடந்த வாரத்தைக் காட்டிலும் குறைவான கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதனால், நாட்டில் கரோனா உச்சநிலையை எட்டிவிட்டு, தற்போது குறையத் தொடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையில் புள்ளி விவரங்கள் அமைந்திருக்கவில்லை. காரணம், கரோனா பரிசோதனையில் கடந்த வாரத்தில் கணிசமான அளவுக் குறைக்கப்பட்டுள்ளதுதான்.

இதன் காரணமாகத்தான், நாள்தோறும் கரோனா பாதிப்பு குறைந்து வருவது போன்ற ஒன்ற மாயத் தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் கரோனா தொற்று, இந்த விவரங்கள் எல்லாம் சொல்வதை விடவும் அதிகமாகப் பரவியிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

வாருங்கள்.. புள்ளி விவரங்கள் சொல்வதைப் பார்க்கலாம்..
செப்டம்பர் 21  முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் புதிதாக 6,32,437 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதே 7 நாள்களைக் கொண்ட செப்டம்பர் 14 - 8 வரையிலான காலக்கட்டத்தில் 6,49,814 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்டம்பர் 21 வரையிலான வாரத்தில் கரோனா தொற்று 2.6% குறைந்துள்ளதாகக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

மேற்கண்ட புள்ளி விவரம் அது உண்மையில்லை என்று ஆணித்தரமாக சொல்கிறது.

இந்த இரண்டு வாரங்களை ஒப்பிட்டு, இந்தியாவில் கரோனா தொற்றுக் குறையத் தொடங்கியிருக்கலாம் என்று எடுத்துக் கொண்டால், இதே இரண்டு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைகளும் குறைந்திருப்பதை காண முடிகிறது. அதாவது முதல் வாரத்தைக் காட்டிலும் இரண்டாவது வாரத்தில் 8.4% கரோனா பரிசோதனை குறைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், கரோனா பரிசோதனை செய்து கொள்வோரில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் விகிதம் இரண்டாவது வாரத்தில் 9% ஆக அதிகரித்துள்ளது. அதுவே முதல் வாரத்தில் 8.48% ஆக இருந்துள்ளது.

முதல் வாரத்தில் 76,62,145 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 6,49,814 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது வாரத்தில் 70,13,506 பரிசோதனைகள் நடத்தப்பட்டு 6,32,427 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சில மாநிலங்களில் கரோனா பரிசோதனை குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மறுத்துள்ளார். நாட்டில் கரோனா தொற்றுக் குறைந்து வருவதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது என்று கூறும் நிபுணர்கள், நாள் தோறும் கரோனா உறுதி செய்யப்படுவது 9.3% ஆக உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

தற்போது கரோனா பரிசோதனைகளை குறைப்பதற்கான நேரமல்ல, மாறாக அதிகரிக்கவே வேண்டும் என்கிறார் சுகாதாரத் துறை நிபுணர் மருத்துவர் ரிஜோ எம் ஜான். பரிசோதனையைக் குறைப்பதன் மூலம், பல கரோனா தொற்றாளர்களை அறிந்து கொள்ளாமலேயே போய்விடும், இது பெரும் ஆபத்து என்றும் எச்சரிக்கிறார் மருத்துவர் பி.கே. தியாகி.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT