இந்தியா

இமாசலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை

23rd Sep 2020 05:07 PM

ADVERTISEMENT

இமாசலில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவான அணுகுமுறையால் தற்கொலை செய்துகொண்டதாக அப்பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய துணை ஆணையர் அமித் காஷ்யப், மாவட்ட கூடுதல் நீதிபதி அமைத்து இது குறித்து உரிய விசாரணை நடத்தி 10 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றுக் கூறினார்.

இமாசலப் பிரதேசத்தின் சோப்பல் பகுதியில் வசித்து வரும் 54 வயது பெண்ணிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 18-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இதனிடையே இன்று (புதன்கிழமை) காலை மருத்துவமனையில் இருந்த கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியப் போக்கான அணுகுமுறையே தற்கொலைக்கு காரணம் என்று பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

காலை 11 மணிக்கு குடிநீர் கொண்டு கொடுத்ததாகவும், எனினும் இரவு 8 மணிக்கே உரியவரிடம் குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டது. இது குறித்து நேற்று  இரவு 10 மணியளவில் தொலைபேசி வாயிலாக பேசியபோது மனவருத்தத்துடன் இருந்ததாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அம்மாநில காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT