இந்தியா

6 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

23rd Sep 2020 07:56 PM

ADVERTISEMENT

நாட்டில் மகாராஷ்டிரம், அசாம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மேற்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரத்தின் மும்பையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை இந்திய வானிலை மையம் மழை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 23 முதல் 26 வரையிலான நாள்களில் அசாம், மேகாலயம், மகாராஷ்டிரம். சிக்கிம், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் கொங்கன், கோவா மற்றும் குஜராத்தின் சில பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Rains
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT