இந்தியா

மகாராஷ்டிர அடுக்குமாடி விபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயா்வு

DIN

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது.
விபத்து நடந்து 24 மணி நேரத்துக்கு பிறகு கட்டட இடிபாடுகளில் இருந்து இரண்டரை வயது சிறுவனின் உடலும், அண்மையில் திருமணமான இளம் ஜோடிகளின் உடல்களும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதே நேரம், உயிருடன் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 25-ஆக உயர்ந்
துள்ளது.
தாணே நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிவண்டி நகரில் இந்த 43 ஆண்டுகள் பழைமையான இந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. மொத்தம் 40 வீடுகளைக் கொண்ட இந்த கட்டடத்தில் 150 பேர் வசித்து வந்தனர்.
திங்கள்கிழமை அதிகாலை 3.40 மணியளவில், குடியிருப்புவாசிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, இந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதன் மூலம், கட்டட இடிபாடுகளில் இருந்து திங்கள்கிழமை 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதே நேரம், விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 சிறுவர்கள் உள்பட 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இரவு முழுவதும் மீட்புப் பணி தொடர்ந்த நிலையில், இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் இரண்டரை வயது சிறுவன், இளம் ஜோடிகள் உள்பட மேலும் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அதே நேரம், இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு: இந்த கட்ட விபத்து தொடர்பாக அதன் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிவண்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் ஷிண்டே கூறுகையில், "இந்த விபத்து தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் சையது அகமது ஜிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.
மேலும், இந்த விபத்து தொடர்பாக இரண்டு மூத்த நகராட்சி அதிகாரிகளை பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதோடு விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT