இந்தியா

நீர்வளத்துறை அமைச்சருடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

23rd Sep 2020 03:32 PM

ADVERTISEMENT

போலவரம் அணைத் திட்டம் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்தார்.

ராயல சீமா பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை முழுமையாக போக்கும் வகையில் போலவரம் திட்டத்தை ஆந்திர அரசு செயல்படுத்த உள்ளது.

இதனிடையே இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் ஆந்திர அரசு நிதியுதவியினை கோரியுள்ளது.

இதற்கு நிதியுதவி அளிக்க முயற்சிகள் எடுக்கப்பட்ம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி நிதியளவு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.

இதனிடையே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை ஆந்திர முதல்வர் நேரில் சந்தித்து பேசினார். இதில் போலவரம் திட்டத்திற்காக விரைந்து நிதிஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

Tags : ஜெகன்மோகன் ரெட்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT