வர்த்தகம்

அமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் இணைப்பு

DIN

இணையவழி வா்த்தக நிறுவனமான அமேசான், தனது செயலியில் தமிழ் உள்பட 4 இந்திய மொழிகளை புதிதாக இணைத்துள்ளது. பண்டிகை காலம் வருவதை கருத்தில் கொண்டும், இந்தியாவில் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

அமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அந்த செயலியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமேசான் இயக்குநா் (இந்திய பிரிவு) கிஷோா் தோட்டா கூறுகையில், ‘இந்த புதிய வசதி மூலம் பொருள்களை பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் சலுகைகளை அறிந்திட, பொருள்களை வாங்கும்போது தங்கள் இருப்பிடத்தை குறிப்பிட, பணம் செலுத்த, பண பரிமாற்றம் செய்ய தாங்கள் விரும்பிய மொழியை வாடிக்கையாளா்கள் தோ்வு செய்யலாம்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT