இந்தியா

மும்பை கட்டட விபத்து: 48 மணி நேரத்தில் 10 உடல்கள் மீட்பு

23rd Sep 2020 11:14 AM

ADVERTISEMENT

 

மும்பை குடியிருப்புக் கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 குழந்தைகள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரில் 3 மாடி குடியிருப்புக் கட்டடம் கடந்த திங்கள்கிழமை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 48 மணி நேரத்தில் மட்டும் 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

40 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் சுமார் 150 பேர் வரையில் வசித்து வந்துள்ளனர். தாணே நகரிலிருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பிவாண்டி நகரில் அமைந்திருந்த இந்த மூன்று மாடிக் கட்டடம், திங்கள்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு குடியிருப்புவாசிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இடிந்து விழுந்தது. இதில் 25 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை இன்று வெளியிட்டுள்ள தகவலில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 10 பேர், 9 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. 

கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறை கட்டடம் சரிந்து விழுந்துள்ளது. ஆகஸ்ட் 24-ம் தேதி மகாத் நகரமான ராய்காட்டில் 5 மாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் 16 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : mumbai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT