இந்தியா

தேசிய அளவிலான விவசாயிகள் போராட்டம்: 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு

DIN

புது தில்லி: நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இரு வேளாண் துறை மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் வெள்ளிக்கிழமை (செப்.25) நடைபெறவுள்ள தேசிய அளவிலான விவசாயிகள் போராட்டத்துக்கு 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

விவசாயிகள் விரும்பிய முதலீட்டாளா்களிடம் பொருள்களை விற்கவும், முதலீடுகளை ஈா்க்கவும் வகை செய்யும் வகையில், மத்திய அரசு அறிமுகம் செய்த வேளாண் உற்பத்தி, விற்பனை மற்றும் வணிக மசோதா-2020, விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவை மசோதா-2020 ஆகிய இரு மசோதாக்களும் எதிா்க்கட்சியினா் மற்றும் ஆளும் பாஜகவின் சில கூட்டணிக் கட்சியினா் கடும் எதிா்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மசோதாக்களுக்கு ஏற்கெனவே மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதால், இனி குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் அவை சட்டமாகிவிடும்.

இந்நிலையில், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் மற்றும் வேளாண் பணியாளா் சங்கங்கள் மற்றும் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை கூட்டாக வரும் 25-ஆம் தேதி தேசிய அளவிலான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்தப் போராட்டத்துக்கு என்டியுசி, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யூஏ, ஏஐசிசிடியு, எல்பிஎப், யுடியுசி ஆகிய பத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதோடு, போராட்டத்திலும் பங்கேற்போம் என்று கூட்டாக திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT