இந்தியா

கரோனா பரிசோதனைக்கு இலக்கு நிர்ணயிப்பதால் நேரிடும் அவலம்

IANS


கரோனா தொற்று பரவும் முறை, அதன் தாக்கம் மனிதர்களுக்கு மனிதர்கள் மாறுபடுவது பற்றிய விவரங்களே இன்னும் முழுவதும் புரிபடவில்லை, அதில் கரோனா பரிசோதனைகள் ஏற்படுத்தும் குளறுபடிகள் மேலும் குழப்பத்தை அதிகரிக்கவே செய்கின்றன.

கரோனா அறிகுறியுடன் இருப்பவர்களுக்கு கரோனா இல்லை என்றும், கரோனா அறிகுறியே இல்லாதவர்களுக்கு தொற்று இருக்கிறது என்றும் பரிசோதனை முடிவுகள் வருவதும், இதுவரை கரோனா பரிசோதனையே செய்து கொள்ளாதவர்களுக்குக் கூட கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுவதும் ஏற்கனவே கரோனா அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது.

இதற்குக் காரணம், கரோனா பரிசோதனை மேற்கொள்ள நிர்ணயிக்கப்படும் இலக்குகளே. இலக்கை எட்ட முடியாத அளவுக்கு நம் நாட்டில் மக்கள் தொகை ஒன்றும் அவ்வளவு குறைவில்லை என்றாலும், கரோனா பரிசோதனை செய்து கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவதே முக்கிய காரணம்.

இந்த நிலையில்தான், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நடந்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பரிசோதனைக்கு இலக்கு நிர்ணயித்ததால், மதுராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் இருந்து, சுகாதாரத் துறை ஊழியர். 15 குப்பிகளில் தனது சளி மாதிரிகளை அடைத்துக் கொடுத்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

அந்த விடியோவில், பால்டியோ சமுதாய நல மையத்தில், ஒரு நாளைக்கு இத்தனை பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று இலக்கு இருப்பதால், மருத்துவர் ஒருவரிடம் இருந்து 15 குப்பிகளில் அவரது சளி மாதிரிகளை நிரப்பி, அதில் வெவ்வேறு நபர்களின் பெயர்களை எழுதி பரிசோதனைக்கு அனுப்பி வைப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அந்த மையத்தில் பணியாற்றும் மற்றொரு மருத்துவர் புகார் அளித்துள்ளார். அதில், ஒரு நாளைக்கு இத்தனை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நோயாளிகள் வராதபட்சத்தில் போலியான சளி மாதிரிகளை தயாரித்துக் கொடுக்கும்படி நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கரோனா பரிசோதனையே செய்து கொள்ளாத 15 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட விவகாரம் இதுபோன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

கரோனா பரிசோதனை செய்து கொள்ள கிராம மக்கள் முன்வராததால், கரோனா பரிசோதனை செய்ய கிராமத்துக்குச் சென்ற ஒப்பந்த ஊழியர்கள், ஒரே நபரிடம் இருந்து சளி மாதிரிகளை எடுத்து வெவ்வேறு பெயர்களில் சோதனைக்கு அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

எனவே, அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வெளியானாலும், இதுபோன்று சுகாதாரத் துறை ஊழியர்களிடம் இத்தனை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கும்போது, அவர்கள் தங்களது பணியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிக்கலே ஏற்படும். எனவே, கரோனா பரிசோதனையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையைவிட, அதை மேற்கொள்வதில் அதிகக் கவனம் செலுத்துவதே உண்மையான நிலவரத்தை அறிந்து கொள்ள உதவும். 

இல்லையேல், இலக்கை எட்டுவது ஒன்றே இலக்காகி, அதன் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT