இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 55 லட்சத்தை எட்டியது

DIN

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55.62 லட்சமாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 75,083 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

இதுநாள்வரை நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55,62,664 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, 44,97,868 போ் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,053 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 88,935 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9,75,861 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஒட்டுமொத்தமாக 6,53,25,779 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை மட்டும் 9,33,185 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT