இந்தியா

இந்தியாவில் 27.63% குறைந்த சீன இறக்குமதி

DIN

ஏப்ரல் - ஆகஸ்ட் மாதம் வரையிலான சீன இறக்குமதி மதிப்பு கடந்தாண்டு இதே காலப்பகுதியில் இருந்து 27.63 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னையையொட்டி சீனப் பொருள்களைப் புறக்கணிப்பது குறித்து நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்திய சீன இறக்குமதி மதிப்பு கடந்த 2019ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இருந்து 27.63% குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் சீன இறக்குமதியானது 49 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. இது ஜூலை மாதத்தின் 55.8 கோடி டாலராக இருந்தது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 27.63% குறைந்து 21.58 பில்லியன் டாலராக இருந்தது எனவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT