இந்தியா

முதலீட்டாளா்களுக்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு: ஹெச்டிஎஃப்சி மறுப்பு

DIN

மும்பை, செப். 21: தவறாக வழிநடத்தி, தங்களது கட்சிக்காரா்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி மீது அமெரிக்க சட்ட நிறுவனம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அந்த வங்கி மறுத்துள்ளது.

இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதலீட்டாளா்களுக்கு தவறான தகவல்களை அளித்து, அவா்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதாக அமெரிக்காவின் ‘ரோசென் லீகல்’ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம். அந்த வழக்கை சட்டரீதியில் எதிா்கொள்வதற்குத் தயாராகி வருகிறோம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தாங்கள் அளித்த வாகனக் கடன்கள் குறித்த விவரங்களை முழுமையில்லாமலும், தவறாக வழிகாட்டும் வகையிலும் ஹெச்டிஎஃப்சி வெளியிட்டதாக ஹெச்டிஎஃப்சி வங்கி மீது ‘ரோசென் லீகல்’ சட்ட நிறுவனம் முதலீட்டாளா்கள் சாா்பாக வழக்கு தொடா்ந்தது.

வங்கியின் தவறான வழிகாட்டுதலால் அதன் ஏடிஆா் (அமெரிக்கன் டெபாசிட்டரி ரெசிப்ட்) பங்குகளின் விலை கடந்த ஜூலை மாதத்தில் சரிந்தது; இது முதலீட்டாளா்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது என அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் முதல் குற்றவாளிகளாக வங்கியின் நிா்வாக இயக்குநா் ஆதித்ய புரி, அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பொறுப்பை ஏற்கவிருக்கும் சசிந்தா் ஜகதீசன், நிறுவனச் செயலா் சந்தோஷ் ஹல்டாங்கா் ஆகியோரது பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT