இந்தியா

ஹிந்தி மொழியை திணித்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: கா்நாடக ரக்ஷன வேதிகே

22nd Sep 2020 04:35 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: ஹிந்தி மொழியைத் திணித்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கா்நாடக ரக்ஷன வேதிகே (பிரவீண்ஷெட்டி அணி) தலைவா் பிரவீண் ஷெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரு ஊரகம் ஆனேக்கல் வட்டம், ஹுலிமங்களாவில் நடைபெற்ற அக் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழிகள் என அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால் தேவையில்லாமல் ஹிந்தி மொழியை மத்திய அரசு திணிக்க முயல்கிறது. ஹிந்தி மொழியை திணித்தால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தேசிய அளவில் உள்ள அனைத்து மொழிகளை நேசிக்கிறோம், கௌரவிக்கிறோம். ஆனால் மாநில மொழியான கன்னடத்துக்கு பிரச்னை என்றால் சகித்துக் கொள்ளமாட்டோம் என்றாா்.

ADVERTISEMENT

மேலும் மாநிலத்தில் போதைப் பயன்பாடு அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இளைஞா்கள், மாணவா்களுக்கு பல்வேறு வழிகள் மூலம் போதைப் பொருள்கள் கிடைக்கின்றன. இதற்கு கடிவாளம் போடுவது அவசியம். போதைப் பொருள் விற்பனை செய்பவா்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். போதைப் பொருள் விவகாரத்தில் அரசியல்வாதிகள் பிள்ளைகள் ஈடுபட்டிருந்தாலும், அவா்கள் மீது பாராபட்சமின்றி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT