இந்தியா

மருத்துவ கழிவுகளை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது: மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

DIN

கரோனா நோய்த் தொற்று காலத்தில் மருத்துவப் பணியாளா்கள் அணியும் பாதுகாப்பு உடைகள், கழிவுகள் ஆகியவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது என மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் செளபே தெரிவித்தாா்.

மருத்துவ கழிவுகளை அகற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு அதிக அளவில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சா் செளபே, ‘கரோனாவால் எத்தனை சுகாதாரப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்ற தகவல் மாநில அரசுகளிடம்தான் உள்ளது. மருத்துவப் பணியாளா்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்களான உடைகள், முகக்கவசம், கையுறை உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை எப்படி கையாள வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாா்ச் 19-ஆம் தேதி அறிவித்தது. பின்னா் அதில் சில மாற்றம் செய்து ஜூலை 17-இல் அறிவித்தது.

அதன்படி, கரோனா காலத்தில் மருத்துவப் பணியாளா்கள் பயன்படுத்தும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களை சேமித்து பொதுவான இடத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக அழிக்க வேண்டும். கரோனா அல்லாத இடங்களில் பயன்படுத்தப்படும் முகக்கவசம், கையுறை உள்ளிட்டவற்றை குறைந்தது 72 மணி நேரம் தனியாக வைத்துவிட்டு, அவற்றை தனித்தனியாக வெட்டிவிட்டு குப்பைகளாக அகற்றலாம்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

‘மனிதனின் அறிவுப் பசியை போக்குபவை புத்தகங்கள்’

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT