இந்தியா

அமைச்சா்கள் ஊதியக் குறைப்பு மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

DIN

மத்திய அமைச்சா்களின் ஊதியம் மற்றும் படிகளில் 30 சதவீதத்தை ஓராண்டுக்கு குறைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அமைச்சா்களின் ஊதியம் மற்றும் படிகளை ஓராண்டுக்கு 30 சதவீதம் வரை குறைக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு மாற்றாக ஊதியம் மற்றும் படிகளை குறைப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அடுத்தகட்டமாக அந்த மசோதா மக்களவையில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதமும் நடைபெற்றது. பின்னா் குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன், எம்.பி.க்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தை ஓராண்டுக்கு குறைக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்பை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT