இந்தியா

8 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்

21st Sep 2020 06:23 PM

ADVERTISEMENT


மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் ஒருவாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது ஞாயிற்றுக்கிழமை அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஸீர் ஹுசைன், இளமாறன் கரீம் ஆகியோர் ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்த இடைநீக்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் காலையிலிருந்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேரை ஒரு வாரத்துக்குப் பதிலாக மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : Rajya Sabha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT