இந்தியா

6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மீண்டும் திறப்பு

தினமணி

6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மஹால் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுலாத்தளங்கள், புராதான சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டன. ஆனால் ஊரடங்கு தொடங்கும் முன் மார்ச் 17ல் தாஜ்மஹால் மூடப்பட்டது.

தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை 6 ஆம் தேதி முதல் அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்கலாம் என, மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்தது. இந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மஹால் மீண்டும் இன்று திறக்கப்பட்டது.

கரோனா விதிகளை பின்பற்றி காலை முதல் சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை கண்டு ரசித்து வருகின்றனர். எனினும், தாஜ்மஹாலை காண நாள் ஒன்றிற்கு 5,000 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT