இந்தியா

அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு

ANI


கரோனா பொதுமுடக்கம் காரணமாக மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட பள்ளிகளின் கதவுகள் மாணவர்களுக்காக திறக்கும் நேரம் நெருங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக நாட்டில் அசாம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் குறிப்பிட்ட சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  

கரோனா பேரிடரால் மாணவ, மாணவிகள் உள்ளூர அச்சம் கொண்டிருந்தாலும் பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வருவதால் உற்சாகமடைந்தனர்.

அசாம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம், ஹரியாணா, உள்ளிட்ட மாநிலங்கள், கரோனா பேரிடரின் தாக்கத்துக்கு ஏற்ப சில விதிமுறைகளுடன், உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

அதன்படி, அசாம் மாநிலத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் சோதனை முறையில் 15 நாள்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த 15 நாள்களும் பள்ளிகள் இயங்கிய பிறகு, அடுத்தக்கட்ட நெறிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக மாணவர்கள் அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் வழக்கமான வகுப்பறைகள் போல் அல்லாமல், இன்று முதல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, பாடத்தில் சந்தேகம் இருக்கும் மாணவ, மாணவிகள் மட்டும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டு செல்ல அந்த மாநில பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுபோலவே, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், இமாச்சல், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வருகை கட்டாயமாக்கப்படாமல், விருப்பம் உடையவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பொறுப்பு பெற்றோருக்கே இருப்பதாக அறிவுறுத்தி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இது குறித்து பெற்றோர் கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT