இந்தியா

தொடர் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ANI


புது தில்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் காலை முதல் தொடர்ந்து நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை பிறகு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நடந்து வரும் அமளியால் இன்று காலையிலிருந்து நான்கு முறை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. பிறகு நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது ஞாயிற்றுக்கிழமை அமளியில் ஈடுபட்ட எட்டு எதிா்க்கட்சி உறுப்பினா்கள், ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஸீர் ஹுசைன், இளமாறன் கரீம் ஆகியோர் மாநிலங்களவையில் மிக மோசமாக நடந்து கொண்டதற்காக ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

மாநிலங்களவையில் மிக மோசமாக நடந்து கொண்ட 8 உறுப்பினர்களையும், அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்குமாறு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வி. முரளீதரன் அனுப்பிய நோட்டீஸ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் அவை நடவடிக்கையில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், காலை 10 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு, பிறகு 10.36 மணிக்கும், 11.07 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷுக்கு  எதிா்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக எதிா்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தையும் வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.

முன்னதாக, மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்ற நடவடிக்கையை அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் கையாண்ட விதத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக 12 எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT