இந்தியா

வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம்: குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

21st Sep 2020 06:23 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் இரண்டு வேளாண் மசோதாக்களில் கையெழுத்திட வேண்டாம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமையன்று, கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் இரண்டு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட வேண்டாம் என்று வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளன.

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும், மசோதாக்களில் கையெழுத்திட வேண்டாம் என்று கோரி காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி, திமுக, சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர்கள் அனுப்பியிருக்கும் கடிதத்தில் வலியுறுத்தியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றதால்தான் சட்டமாக்கப்படும் என்ற நிலையில், குடியரசுத் தலைவர் கையெழுத்திடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, செவ்வாயன்று குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு எதிர்க்கட்சிகள் கேட்டுள்ளனர்.

அப்போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட இரண்டு வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று வலியுறுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : President
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT