இந்தியா

ஒடிசாவில் புதிதாக 4,242 பேருக்குத் தொற்று: மேலும் 9 பேர் பலி

PTI

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,242 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,242 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,84,122 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 2,503 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்தும், 1,739 பேர் உள்ளுரிலும் கண்டறியப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு 37,684 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 1,45,675 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 47,758 சோதனைகள் செய்யப்பட்டதை அடுத்து மொத்தமாக 28.14 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT