இந்தியா

கரோனாவால் கலங்கி நிற்கும் காப்பீட்டுத் துறை

ENS


மார்ச் மாதம் தொடங்கி நாட்டின் பல்வேறு துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கரோனா பொதுமுடக்கம் காப்பீட்டு நிறுவனங்களில் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் மாத இறுதி முதல் நான்கு மாதங்களுக்கு புதிதாக காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துபோயுள்ளது.  ஊதியக் குறைப்பு, வேலையிழப்பு, நிலையற்ற தன்மை போன்றவற்றால் புதிதாக காப்பீடு கோருவோர் குறைந்து போனதோடு, காப்பீடுகளை புதுப்பிப்பதும் குறைந்தது. இதன் விளைவாக சுமார் 40 லட்சம் புதிய காப்பீடுகள் எடுக்கப்படாமலேயே முடிந்துபோயின. இதனால் காப்பீடு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 45 ஆயிரம் கோடி ரூபாய்.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் புதிய காப்பீடுகளை இழந்து, புதிய காப்பீடுகள் மூலமாக மட்டும் கிடைத்திருக்க வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடி புதிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பீடுகள் புதுப்பிக்கப்படாமல் காலாவதியானதாக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலாண்டில், காப்பீட்டு நிறுவனங்கள் அடைந்த நட்டம் என்பது ரூ.49,335 கோடிகள். ஆகஸ்ட் மாதத்தில் தொழில்கள் தொடங்கப்பட்டாலும், காப்பீட்டை புதுப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், காப்பீடுகளை புதுப்பிப்பது பெருமளவில் குறைந்திருப்பதாகவும், மிக அதிக மதிப்புள்ள காப்பீடுகள் மட்டுமே புதுப்பிக்கப்படுவதாகவும், ஆனால் இந்த ஆண்டு முழுவதும் இதே நிலை நீடிக்காது என்று எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார்.

இந்த காலாண்டில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புள்ளி விவர ஆய்வில், 2020-ஆம் ஆண்டில் காப்பீட்டு நிறுவனம் 0.9 சதவீத சரிவைக் கண்டிருப்பதாகவும் இதற்கு மாறாக 2019-ஆம் ஆண்டில் இது 8.8 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT