இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 159 காவலர்களுக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 159 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மகாராஷ்டிர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 159 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மொத்த காவலர்கள் எண்ணிக்கை 21,311 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17,434 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 222 பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு பொது முடக்கம் அமல்படுத்தியதிலிருந்து இதுவரை 96,174 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ. 25,85,94,064 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன." 

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அந்த மாநில சுகாதாரத் துறை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, அங்கு மொத்தம் 12,08,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 32,671 பேர் பலியாகியுள்ளனர், 8,84,341 பேர் குணமடைந்துள்ளனர். 2,91,238 பேர் இன்னும் கரோனாவுக்கான சிக்ச்சையில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT