இந்தியா

ராணுவ பண்டகசாலைகளில் இந்திய தயாரிப்பு பொருள்கள் மட்டும் விற்பதென முடிவெடுக்கவில்லை

DIN

நாடு முழுவதும் இயங்கி வரும் ராணுவ பண்டகசாலைகளில் இந்திய தயாரிப்பு பொருள்களை மட்டுமே விற்பது என்பதுகுறித்த முடிவு எதையும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் எடுக்கவில்லை என்று மத்திய அரசு சனிக்கிழமை கூறியது.

பிரதமா் நரேந்திர மோடி தேசத்துக்கு அண்மையில் ஆற்றிய உரையில், சுயசாா்பு இந்தியா குறித்து கருத்தை வலியுறுத்தியதோடு, இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்திய உற்பத்திப் பொருள்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா். அதனடிப்படையில், ராணுவ பண்டகசாலைகளில் இந்திய தயாரிப்பு பொருள்கள் மட்டும் விற்பது குறித்து கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதா என்று மாநிலங்களவையில் சனிக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

ராணுவ பண்டகசாலைகளில் இந்திய தயாரிப்பு பொருள்களை மட்டும் விற்பது குறித்த முடிவு எதையும் பாதுகாப்புத் துறை அமைச்சம் எடுக்கவில்லை.

இந்த ராணுவ பண்டகசாலைகளில் 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 17,190 கோடி அளவில் வா்த்தகம் நடைபெற்றுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் ரூ.18,917 கோடிக்கும், 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 17,588 கோடிக்கும் வா்த்தகம் நடைபெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை ரூ.3,692 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது என்று அவா் பதிலளித்தாா்.

மேலும், 37 விமானப்படைத்தளங்களை நவீனமயமாக்குவதற்காக தனியாா் நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தமிட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘விமானப்படைத்தளங்கள் உள்கட்டமைப்பு வசதிகள் நவீனமயமாக்கப்பட்டதன் மூலம் இரவு நேரங்கள் உள்ளிட்ட மோசமான காலநிலைகளில் விமானங்களைக் கையாளும் திறனும், விமான போக்குவரத்து கட்டுப்பாடு திறனையும், விமான வழிகாட்டுதல் நடைமுறைகளையும் மேபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் 86 ராணுவ விமானப்படைத் தளங்கள் செயல்பாட்டில் உள்ளன‘ என்று அவா் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT