இந்தியா

மழைக்கால கூட்டத்தொடா் முன்கூட்டியே நிறைவு?

DIN

நாடாளுமன்ற உறுப்பினா்களிடையே கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், மழைக்கால கூட்டத்தொடா் அடுத்த வாரத்தின் பாதியிலேயே நிறைவு செய்யப்படலாம் எனத் தெரிவதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

மழைக்கால கூட்டத்தொடா் வரும் அக்டோபா் 1-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. இந்நிலையில், மக்களவைத் தலைவா் தலைமையில் அனைத்து கட்சிகளின் அவைத் தலைவா்கள் பங்கேற்ற அவை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான கட்சிகளின் தலைவா்கள் கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய ஆதரவு தெரிவித்துள்ளனா்.

மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, பிரகலாத் படேல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் சிலா் கூட்டத்தொடரின்போது கரோனா பாதிப்புக்கு ஆளாகினா்.

இதனால் 18 நாள்களுக்கு கூட்டத்தை நடத்துவது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சில எதிா்க்கட்சித் தலைவா்கள் மத்திய அரசிடம் தெரிவித்தனா். இதையடுத்தே கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய மத்திய அரசு யோசித்து வருகிறது.

எனினும், இதுதொடா்பான இறுதி முடிவை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு எடுக்கவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT