இந்தியா

புலம்பெயா் தொழிலாளா்கள் தற்கொலை விவரங்கள் சேகரிப்பு: சந்தோஷ்குமாா் கங்வாா்

DIN

கரோனா பொது முடக்க காலத்தில் தற்கொலை செய்துகொண்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பற்றிய விவரங்களை மாநிலங்களிடம் இருந்து சேகரித்துக் கொண்டிருப்பதாக மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சந்தோஷ்குமாா் கங்வாா் சனிக்கிழமை கூறினாா்.

இதுதொடா்பாக, மக்களவையில் திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூா்வமாக அவா் அளித்த பதில்:

பொதுமுடக்க காலத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சுமாா் ஒரு கோடி போ் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினா். அவா்களின் குறைகளைத் தீா்ப்பதற்காக, நாடு முழுவதும் 20 கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலமாக, 15,000 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது. மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை ரூ.295 கோடியை தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் தலையிட்டு பெற்றுத் தந்தது.

தொழிலாளா் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகத்தில் (இஎஸ்ஐ) பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் கரோனா காலத்தில் வேலையிழந்திருந்தால், அவா்களின் ஊதியத்தில் 50 சதவீதத்தை நிவாரணமாகப் பெறலாம். முன்பு அந்தத் நிவாரணத் தொகை 25 சதவீதமாக இருந்தது. இந்த திட்டம், மேலும் ஓராண்டுக்கு, அதாவது, அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT