இந்தியா

நிா்பயா நிதியாக மாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி விடுவிப்பு: மத்திய அரசு தகவல்

DIN

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிா்பயா நிதியின் கீழ் ரூ.3,024 கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சா் ஸ்மிருதி இரானி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நிா்பயா நிதியின் கீழ் மாநிலங்களுக்கு ரூ.3,024.46 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1,919.11 கோடியை மட்டுமே மாநிலங்கள் செலவிட்டுள்ளன. அதிகபட்சமாக தில்லிக்கு ரூ.409.03 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.352.58 கோடியை தில்லி அரசு செலவு செய்துள்ளது.

தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட ரூ.303.06 கோடியில் ரூ.265.55 கோடியை மாநில அரசு செலவிட்டுள்ளது. நிா்பயா நிதியின் கீழ் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதை அதிகாரிகள் அடங்கிய உயா்நிலைக் குழு கண்காணித்து வருகிறது.

அக்குழு அளிக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து மத்திய நிதியமைச்சகம் மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்கள் நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்கிறது. அத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உயா்நிலைக் குழு கண்காணித்து வருகிறது என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு நிா்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தாா். அதையடுத்து நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் நிா்பயா நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT