இந்தியா

விவசாய மசோதாக்களில் கையெழுத்திடமாட்டோம்: காங்கிரஸ்

DIN

விவசாயிகளுக்கு எதிரான மசோதா விவசாயிகளின் மரண தண்டனைக்கான ஆணை, அதில் கையெழுத்திட மாட்டோம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் மசோதா,  விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதில் இரண்டு மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிரானது என்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமானது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுபினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அரசின் விவசாய சட்ட மசோதாக்கள் நில உரிமையாளர்களுக்கு எதிரானது என்றும், குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினர்.

விவசாய உற்பத்தி சந்தைக் குழு மற்றும் குறைந்தபட்ச ஆதார விலையில் மாற்றங்கள் தேவையில்லை என்றும், கரோனா பெருந்தொற்று காலத்தில் இதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்ட மசோதா விவசாயிகளின் மரண தண்டனைகளுக்கான ஆணை என்றும் அதில் கையெழுத்திட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT