இந்தியா

மத்திய அரசின் வேளாண் திட்டம் வெற்றிபெற நாடு அனுமதிக்காது: ராகுல் காந்தி 

20th Sep 2020 01:33 PM

ADVERTISEMENT


புதுதில்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்துறை தொடா்பான 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் வேளாண் திட்டம் வெற்றிபெற நாடு அனுமதிக்காது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

‘விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா’, ‘விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா’, ‘அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா’ ஆகிய அந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவானவை என்று குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில்,  காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது சுட்டுரை பக்க பதிவில் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

அதில், மோடி அரசாங்கத்தால் விவசாயத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தில் குறைந்த ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ள ராகுல்,  முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற பிரதமர் மோடி நினைக்கிறார். மத்திய அரசின் இந்த வேளாண் திட்டம் வெற்றி பெற நாடு ஒருபோதும் அனுமதிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Tags : RahulGandhi FarmBill
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT