இந்தியா

அமளிக்கு பிறகு மாநிலங்களவை மீண்டும் கூடியது

DIN

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை உறுபினர்கல் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 1.41 வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியது.

விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் மசோதா,  விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று (ஞாயிற்றுக் கிழம்)தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாக்கள் குறித்து மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உரையாற்றிய போது எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

3 மசோதாக்களையும் தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், மசோதாக்களின் நகலையும் எரித்தனர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது.

துணைத்தலைவர் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநிலங்களவையை பிற்பகல் 1.41 வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவை உறுப்பினர்கள் சமாதானம் அடைந்ததால் அவை மீண்டும் கூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT