இந்தியா

கர்நாடக புதிய தொழிற்கொள்கை: ரூ.30,000 கோடி செல்போன் உற்பத்தி இலக்கு

DIN

கர்நாடகத்தில் புதிய தொழிற்கொள்கையால் ரூ.30,000 கோடி மதிப்பிற்கு செல்போன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் செல்போன் உற்பத்திக்காக புதிய தொழிற்கொள்கை 2020 - 25 என்ற திட்டத்தை கர்நாடக அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவரப்பட்டது.

ஆப்பிள், வின்ஸ்ட்ரான், லாவா உள்ளிட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்தியா செல்போன் மற்றும் மின்னணுப் பொருள்கள் சங்கம் (ஐ.சி.இ.ஏ), ஐந்து ஆண்டுகளுக்கான பாலிசி காலத்தில் வருடாந்திர வருவாயில் 1 சதவீத உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை போன்ற குறிப்பிட்ட கொள்கை போன்ற அரசாங்கத்தின் சலுகைகள் வரவேற்கத்தக்கது. 

இதன்மூலம் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித்துறை வளர்ச்சி அடையும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 1 முதல் 1.5 சதவிகிதம் வரையுள்ள செல்போன் உற்பத்தி இந்த திட்டத்தின்மூலம் 7 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக செல்போன் மற்றும் மின்னணுப் பொருள்கள் சங்க தலைவர் பங்கச் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 2023-ஆம் ஆண்டுக்குள் 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT