இந்தியா

இந்தியாவில் அதிக அளவாக ஒரே நாளில் 94,612 பேர் குணமடைந்தனர்: மத்திய சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,000-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 
தொடர்ந்து இரண்டு நாள்களாக தினமும் 94 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொவைட் தொற்றில் இருந்து இந்தியாவில் குணமடைந்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94,612 கரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்தை (43,03,043) கடந்துள்ளது. குணமடைதல் விகிதம் தற்போது 79.68 சதவீதமாக உள்ளது.
குணமடைந்தவர்களில் 60 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளனர்.
23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்த நிலையில் மகாராஷ்டிர தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 92,605 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 52 சதவீதம் பேர் ஐந்து மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவர்கள். அதிக குணமடைதல்களை கண்டு வரும் அதே ஐந்து மாநிலங்கள் தான் இவையும் ஆகும்.
20 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் (22.16%) மகாராஷ்டிரத்தில் இருந்து பதிவாகியுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் தலா 8 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT