இந்தியா

தில்லியில் இன்று புதிதாக 3,812 பேருக்கு கரோனா 

20th Sep 2020 09:53 PM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் இன்று ஒரே நாளில் 3,812 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் 3812 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,46,711 ஆக அதிகரித்தது. நோய்த் தொற்றால் இன்று மேலும் 37 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,982-ஆக அதிகரித்தது. 3742 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். 

இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,09,632 ஆக அதிகரித்தது. தற்போதைய நிலைவரப்படி மொத்தம் 32,097 போ் சிகிச்சையில் உள்ளனா். ஒரே நாளில் மொத்தம் 52,405 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 11,322 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில், 41,083 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,872 ஆக அதிகரித்துள்ளது.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,621 படுக்கைகளில் 7,040 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 8,581 படுக்கைகள் காலியாக உள்ளன. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 18,910 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT