இந்தியா

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 4,696 பேருக்கு கரோனா;16 பேர் பலி

DIN

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 4,696 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஆரம்ப கட்டத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா வைரஸ், வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்களால் தற்போது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் 4, 696 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

இதனால் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,35,721 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் தற்போது 39 ஆயிரத்து 415 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 2,751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95,702 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 16 பலியாகியுள்ளனர். இதையடுத்து கரோனா தாக்குதலுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 535ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT