இந்தியா

30 ஆண்டுகளாக 3 கி.மீ கால்வாய் அமைத்த விவசாயிக்கு டிராக்டர் பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்

20th Sep 2020 09:35 PM

ADVERTISEMENT

30 ஆண்டுகளாக 3 கி.மீ தூரத்திற்கு கால்வாய் வெட்டிய விவசாயிக்கு மஹிந்திரா நிறுவனம் டிராக்டர் ஒன்றை பரிசளித்துள்ளது.

பிகார், மாநிலம் கயா மாவட்டம், கொத்திலாவா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி லாயுங்கி புய்யான். இவர் தனது கிராமத்திற்காக தனி ஒரு ஆளாக முயற்சி செய்து 30 ஆண்டுகளாக 3 கி.மீ. தூரத்திற்கு மலைப்பகுதியில் இருந்து கால்வாய் ஒன்றை வெட்டினார். முதியவரின் இந்த முயற்சியால் தற்போது அந்த கிராமத்துக்கு தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது.

இது அங்குள்ள கால்நடைகளுக்கும், வயலுக்கும் பெரும் உதவியாக இருப்பதாக ஊர்மக்கள் கூறி உள்ளனர். அவர் தனக்காக மட்டுமல்லாமல் அந்த பகுதிக்கே உதவி செய்துள்ளார் என அங்குள்ள கிராமவாசிகள் முதியவரை பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி விவசாயி தொடர்பான புகைப்படம் இணையதளத்திலும் வெளியாகி வைரலானது.

இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் விவசாயி லாயுங்கி புய்யான் சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் டிராக்டர் ஒன்றை பரிசளித்துள்ளது. இதுகுறித்து விவசாயி லாயுங்கி கூறுகையில், எனக்கு டிராக்டர் கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
 

ADVERTISEMENT

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT