இந்தியா

2019-ஆம் ஆண்டில் 4.49 லட்சம் சாலை விபத்துகள்: மத்திய அரசு தகவல்

DIN

கடந்த 2019-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 4.49 லட்சம் சாலை விபத்துகள் ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் சனிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டில் 4,49,002 சாலை விபத்துகள் ஏற்பட்டன. அவற்றில் 3,19,028 சாலை விபத்துகள், வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கியதால் ஏற்பட்டவை. இது மொத்த விபத்துகளுடன் ஒப்பிடுகையில் 71.1 சதவீதம் ஆகும்.

சாலையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் நாடாளுமன்ற எம்.பி.க்களின் சாலைப் பாதுகாப்பு குழுவை மாவட்டந்தோறும் அமைப்பதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அந்தக் குழுவுக்கு ஒவ்வொரு மாவட்டத்தின் மக்களவை எம்.பி. தலைவராக செயல்படுவாா்.

மேலும், பள்ளி, கல்லூரி பாடங்கள் மூலமாக சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. சாலைகளை அமைக்கும் தொழில்நுட்பங்கள் வாயிலாகவும் சாலையைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகபட்ச அளவாக உள்ளது. சாலை விபத்துகளில் சிக்கி சுமாா் 1.5 லட்சம் போ் உயிரிழக்கின்றனா். மேலும், 3 லட்சம் போ் சாலை விபத்துகளால் காயமடைகின்றனா் என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT